ஹோண்டா ஹார்நெட் உள்பட இரண்டு புதிய 650cc பைக்குகளை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஒரிஜினல் 600cc பைக்கள் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளை இயக்குனர் ஃபேப்ரிஸ் ரெக்கோக் (Fabrice Recoque), சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஹோண்டா நிறுவனம் இரண்டு புதிய மிடில்வெயிட் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதை உறுதி செய்துள்ளார். இந்த மாடல்கள் 650cc கொண்டதாக இருக்கும் என்றார். மேலும் பேசிய அவர், புதியதாக அறிமுகம் செய்யப்பட உள்ள பைக்களில் ஒன்று புதிய வெர்சனில் மிடில்வெயிட் கொண்ட ஹோண்டா ஹார்நெட் ஆக இருக்கலாம் என்றார்.
ஹார்நெட்டை மீண்டு கொண்டு வரும் எண்ணத்தை ஹோண்டா கைவிட்டு விட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இதற்கு மறுப்பு தெரிவித்தோடு, இதற்கு பதிலாக இரண்டு புதிய பைக்குகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றும் அது ஹார்நெட்-ஆகவும் இருக்கலாம் என்று தெரிவித்தார்.
இந்த புதிய பைக்குகள் வரும் நவம்பர் மாதத்தில் இத்தாலின் மிலனில் நடக்க உள்ள EICMA ஷோவில் காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, 2019ம் ஆண்டில் நவீன ப்ரோடோடைப் மாடல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது
கடந்த 1998ம் ஆண்டு ஹோண்டா CB600F ஹார்நெட் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதே மாடல் கடந்த 2011ம் ஆண்டு வரை தொடர்ந்ததோடு, உலகின் பல்வேறு மார்க்கெட்களிலும் விற்பனை செய்யப்பட்டது.
தற்போது ஹோண்டா மிடில் வெயிட் பைக்குகளுக்கான புரோட்டோபோலியோ-வை வெளியிட்டுள்ளது. அதில் ஹோண்டா CB650F-ம் ஒன்று, இந்த வாகனங்கள் இந்தியாவில் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை. வரும் 2019ம் ஆண்டில் ஹோண்டா CB650F பல்வேறு அப்டேட்களுடன், புதிய மாடலாக, நவம்பரில் நடக்கும் EICMA ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.