இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி இந்தியா லிமிடெட், கடந்த ஜூன் 2018 மாதந்திர விற்பனையில் 1,44,981 யூனிட்டுகளை விற்பனை செய்து ஜூன் 2017 மாதத்துடன் ஒப்பீடுகையில் 36.3 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.
மாருதி சுசூகி கார்
அதிகப்படியான பயணிகள் வாகனங்களை உற்பத்தி செய்கின்ற மாருதி சுசூகி விற்பனை தொடர்ந்து சிறப்பான வளர்ச்சி தொடக்கநிலை ஹேட்ச்பேக் உள்பட காம்பேக்ட் ரக எஸ்யூவி சந்தை வரை பெற்று விளங்குகின்றது.
குறிப்பாக நடந்து முடிந்த ஜூன் 2018யில் இந்நிறுவனம் மொத்தமாக 1,44,981 கார்களை இந்தியா மற்றும் ஏற்றுமதி சந்தையில் விற்பனை செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம், கடந்த ஜூன் 2017யில் 1,06,394 யூனிட்டுகளை மட்டும் விற்பனை செய்திருந்தது குறிப்பிடதக்கதாகும். உள்நாட்டில் மாருதி நிறுவனம் 45.5 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது ஜூன் 2017யில் சுமார் 93,263 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஜூன் 2018 மாதத்துடன் ஒப்பீடுகையில் 1,35,662 யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது.
ஆனால் இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சந்தை 29 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக ஜூன் 2018யில் 9,139 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்துள்ள மாருதி முந்தைய வருடம் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 13,131 யூனிட்டுகள் ஏற்றுமதி செய்திருந்தது.
இந்தியாவில் தொடர்ந்து மாருதி ஆல்ட்டோ, டிசையர், ஸ்விஃப்ட் , வேகன்ஆர் போன்ற கார்களுடன் பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா போன்ற கார்கள் அமோக ஆதரவை பெற்று விளங்குகின்றது. மாருதியின் சியாஸ், இக்னிஸ் டீசல் போன்றவை போதிய வரவேற்பின்றி விளங்குகின்றது.
மேலும் இந்நிறுவனத்தின் 2018-2019 ஆம் நிதி வருடத்தின் முதல் காலாண்டில் (ஏப்ரல் -ஜூன் 2018) சுமார் 458,967 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டு முந்தைய நிதி ஆண்டின் காலாண்டுடன் ஒப்பீடுகையில் 24.9 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.