இந்தியாவில் விற்பனையில் உள்ள வெள்ளை நிற கேடிஎம் ஆர்சி 200 ஸ்போர்ட்டிவ் பைக் மாடலுடன் புதிதாக கருப்பு நிறத்தை கொண்ட கேடிஎம் RC 200 பைக் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ. 1.77 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கேடிஎம் RC 200
இந்தியாவில் உள்ள அனைத்து கேடிஎம் டீலரெகளிடமும் கிடைக்க தொடங்கியுள்ள புதிய கருப்பு நிறத்தில் முந்தைய மாடலை போலவே அமைந்துள்ளது. இதில் நிறத்தை தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லாம்ல், 25 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 199சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 19.2 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்படாமல் விற்பனைக்கு கிடைக்கின்ற ஆர்சி 200 பைக்கின் முன்புற டயரில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புற டயரில் 280 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, அப்சைடு டவுன் ஃபோர்க்கு பெற்ற 43 மிமீ சஸ்பென்ஷன் மற்றும் ப்ரீலோடேட் மோனோஷாக் அப்சார்பரை பின்புறத்தில் பெற்று விளங்குகின்றது.
புதிதாக வந்துள்ள கருப்பு நிறத்தில் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற கலவையிலான ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு வந்துள்ள இந்த மாடலின் விலை விற்பனையில் உள்ள வெள்ளை நிறத்திலான ஆர்சி 390 விலையை பெற்றுள்ளது.
கேடிஎம் RC 200 பைக் விலை ரூ. 1.77 லட்சம் ( டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)