8.5 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 124.3 cc எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.2 Nm இழுவைத் திறனை பெற்றதாக பொருத்தப்பட்டிருக்கின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் ஒற்றை சாக் அப்சார்பரை பின்புறத்தில் பெற்றிருக்கின்றது. முன்புற டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் டிரம் பிரேக் வழங்கப்பட்டு கூடுதலாக சிபிஎஸ் எனப்படும் பாதுகாப்பு சார்ந்த பிரேக்கிங் அமைப்பினை கொண்டதாக விளங்கும்.
இந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் அகலமான இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், ட்யூப்லெஸ் டயர், 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்ட அம்சங்களை பெற்றதாக அமைந்திருக்கும்.
தற்போது அப்ரிலியா SR125, டிவிஎஸ் என்டார்க் 125 போன்ற மாடல்களுடன் நேரடியான போட்டியை எதிர்கொள்வதுடன் ஹோண்டா கிரேஸியா மற்றும் வரவுள்ள 125சிசி ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் ஆகிய மாடல்களை பர்க்மென் ஸ்கூட்டர் எதிர்கொள்ள உள்ளது.
சுசூகி பர்க்மென் ஸ்கூட்டர் 125 விலை ரூ. 70,000 ஆக அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஜூலை19ந் தேதி விற்பனைக்கு கிடைக்க உள்ளது.