டிவிஎஸ் மோட்டார் கம்பெனி வெளியிட்ட, பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவான ஃபுல் ஃபேரிங் ஸ்போர்ட்டிவ் ரக அப்பாச்சி RR310 பைக்கின் அடிப்படை பராமரிப்பு உதிரிபாகங்கள் விலையை டிவிஎஸ் மோட்டார் வெளியிட்டு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பாச்சி ஆர்ஆர்310 முன்புற பிரேக் பேட் விலை ரூ. 2,236 ஆகும்.
டிவிஎஸ் அப்பாச்சி RR310
கடந்த டிசம்பர் மாதம் வெளியான அப்பாச்சி RR310 பைக்கின் பராமரிப்பு செலவு தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவிவந்த நிலையில், அதிகார்வப்பூர்வமாக டிவிஎஸ் வெளியிட்டுள்ள உதிரிபாகங்களின் விலை பட்டியல் விபரத்தை தொடர்ந்து காணலாம்.
குறிப்பாக அதிகப்படியாக பயன்படுத்தப்படும் முன்புற டிஸ்க் பிரேக் பேட் விலை ரூ. 2,236 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பின்புற பிரேக் ரூ.1050 ஆகும். கிளட்ச் கேபிள் ரூ. 698 , திராட்டிள் கேபிள் ரூ. 750, ஆயில் ஃபில்டர் ரூ. 271, ஏர் ஃபில்டர் ரூ. 348 ஆகும். மேலும் ஹெட்லைட் அசெம்பிளி ரூ. 21,390 , சைலன்சர் அசெம்பளி ரூ. 21,500, டிரைவ் செயின் ரூ. 7000 ஆகும்.
டெர்லிஸ் ஃபிரேம் அடிச்சட்டை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பைக் மிகவும் ஸ்டைலிஷான இரட்டை பிரிவு கொண்ட வட்ட வடிவ முகப்பு விளக்குடன் பை-எல்இடி விளக்குகளை கொண்டுள்ளது. மிக நேர்த்தியான பாடி ஸ்டிக்கரிங் பெற்றுள்ள ஆர்ஆர்310 பைக்கில் பின்புறத்தில் அமைந்துள்ள டெயில் விளக்கு எல்இடி ஒமேகா வடிவத்தில் அமைந்துள்ளது.
அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் 313 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 34 ஹெச்பி ஆற்றல் மற்றும் 28 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் ஆற்றலை எடுத்துச் செல்ல 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. 0 முதல் 60 கிமீ வேகத்தை 2.63 விநாடிகளில் எட்டும் திறனுடன்,அதிகபட்சமாக மணிக்கு 165 கிமீ வேகத்தை எட்டும் திறனை பெற்றுள்ளது.
இரட்டைப் பிரிவு எல்இடி முகப்பு விளக்குடன் முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்குடன், தங்க நிறத்துடன் கூடிய யூஎஸ்டி ஃபோர்க்குகள், 17 அங்குல அலாய வீல் 5 ஸ்போக்குகளுடன் கூடிய மிச்செலின் ரேடியல் டயர் பெற்றதாக வந்துள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் மைலேஜ் லிட்டருக்கு 25 முதல் 30 கிமீ அமைந்திருக்கின்றது.
டிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் விலை ரூ.2.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)