இந்தியர்களின் கார் என அழைக்கப்படும் மாடல்களில் ஒன்றாக விளங்கும் மாருதி சுசுகி டிசையர் காரில் பின்புற வீல் ஹாப் கோளாறு காரணமாக விற்பனை செய்யப்பட்ட 21,494 மாருதி டிசையர் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
மாருதி டிசையர் கோளாறு
அறிமுகம் செய்த குறைந்த காலத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கார்களை விற்பனை செய்துள்ள மாருதி சுஸூகி நிறுவனத்தின் புதிய தலைமுறை டிசையர் மாடலில் பின்புற சக்கரங்கில் உள்ள வீல் ஹப் இலவசமாக மாற்றித் தரப்பட உள்ளது.
குறிப்பாக கடந்த பிப்ரவரி 23, 2017 முதல் ஜூலை 10ம் தேதி வரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 21,494 டிசையர் கார்களில் இந்த பிரச்சனை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
உங்களது வாகனமும் இந்த கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதா என்று அறிய இந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் அடிச்சட்டத்தின் எண்ணை (Chassis Number starts MA3 – follows14digit ) கொண்டு அறிந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு உங்களது அருகாமையில் உள்ள டீலரை அனுகவும்.