இந்தியாவை மையமாக கொண்டு செயல்படும் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனமும் கார் மற்றும் எஸ்யூவி விற்பனையில் சிறப்பான வளர்ச்சி பெற்று வருகின்றது.
கார் விற்பனை நவம்பர் – 2017
அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக உருவெடுக்க திட்டமிட்டிருந்த டாடா மோட்டார்ஸ் நவம்பர் மாத முடிவில் 17,157 கார்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 35 சதவீத வளர்ச்சி அதாவது நவம்பர் 2016யில் 12,736 கார்களை விற்பனை செய்திருந்தது.
டாடாவின் புதிய இம்பேக்ட் டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கபட்ட டியாகோ, டிகோர் , ஹெக்ஸா ஆகியவற்றுடன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட காம்பேக்ட் ரக டாடா நெக்ஸான் ஆகியவை அமோகமான ஆதரவை பெற்று உள்ளதே டாடாவின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.
இந்தியாவின் மற்றொரு தயாரிப்பாளரான யுட்டிலிட்டி சந்தையின் முன்னணி நிறுவனமாக விளங்கும் மஹிந்திரா நவம்பர் மாத முடிவில் 16,030 கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை விற்பனை செய்து முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 21 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.