இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசுகி நிறுவனம் ரூ.4.57 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி செலிரியோ X என்ற பெயரில் க்ராஸ்ஓவர் ரக மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
மாருதி சுசுகி செலிரியோX
க்ராஸ்ஓவர் ரக வெர்ஷன் மாடலாக வெளியிடப்பட்டுள்ள மாருதி செலிரியோ X மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் என இரண்டிலும் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.
X வடிவத்தை நினைவுப்படுத்தும் வகையில் முன்புறத்தில் பம்பர் கிரில் புதுப்பிக்கப்பட்டு, பக்கவாட்டு மற்றும் பின்புறத்தில் கிளாடிங் இணைக்கப்பட்டிருப்பதுடன் , பி பில்லரில் கருப்பு நிற பூச்சுடன் ஆரஞ்சு நிற வண்ணத்தை கூடுதலாக பெற்றுள்ளது.
எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் ஆகியவற்றில் எவ்விதமான மாறுதல்களும் செய்யப்படாமல், சாதாரன செலிரியோ காரில் உள்ள 68hp ஆற்றலை வெளிப்படுத்தும் 90Nm டார்க்கினை வழங்கும் 998சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆகிய இரண்டிலும் கிடைக்க உள்ளது.
மாருதி சுசுகி செலிரியோ X விலை பட்டியல்
மேனுவல் வேரியன்ட் (ex-showroom, Delhi) | |
வேரியன்ட் | விலை |
Vxi | ரூ. 4.57 லட்சம் |
Vxi (O) | ரூ. 4.72 லட்சம் |
Zxi | ரூ. 4.82 லட்சம் |
Zxi (O) | ரூ. 5.31 லட்சம் |
ஆட்டோமேட்டிக் வேரியன்ட் (ex-showroom, Delhi) | |
வேரியன்ட் | விலை |
Vxi AMT | ரூ. 5.00 லட்சம் |
Vxi (O) AMT | ரூ. 5.15 லட்சம் |
Zxi AMT | ரூ. 5.25 லட்சம் |
Zxi (O) AMT | ரூ. 5.43 லட்சம் |