உலகின் மிக பழமையான மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த நவம்பர் மாத முடிவில் 70,126 பைக்குகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு விற்பனை நிலவரம் – நவம்பர் 2017
இந்தியா சந்தையில் தொடர்ந்து கம்பீரமான ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் கடந்த நவம்பர் 2017 மாதந்திர விற்பனை முடிவில் இந்திய சந்தையில் 67,776 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் (55,843 அலகுகள்) வளர்ச்சி அடைந்துள்ளது.
சர்வதேச விற்பனையில் என்ஃபீல்டு 60 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது குறிப்பாக கடந்த நவம்பரில் 1,470 அலகுகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 2,350 அலகுகளை விற்பனை செய்துள்ளது.
மேலும் கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் முழுமையான ஒப்பீட்டு விபரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனை நிலவரம்
இடம் | Nov-17 | Nov-16 | வளர்ச்சி |
---|---|---|---|
இந்தியா | 67,776 | 55,843 | 21% |
சர்வதேசம் | 2,350 | 1,470 | 60% |
மொத்தம் | 70,126 | 57,313 | 22% |
இடம் | Apr-Nov 2017 | Apr-Nov 2016 | வளர்ச்சி |
இந்தியா | 5,14,094 | 4,21,372 | 22% |
சர்வதேசம் | 12,387 | 9,492 | 30% |
மொத்தம் | 5,26,481 | 4,30,864 | 22% |