உலகின் மிக மலிவான விலை கொண்ட காராக கருதப்படும் டாடா நானோ காரின் பின்னணியில் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான பவர்ட்ரெயினுடன் கூடிய ஜெயம் நியோ என்ற பெயரில் நானோ கார் விற்பனைக்கு வரவுள்ளது.
ஜெயம் நியோ
ரத்தன் டாடா அவர்களின் கனவு கார் என அறியப்படுகின்ற விலை குறைந்த நானோ கார் பெட்ரோல் வகையில் பெரிதும் எதிர்பார்த்த விற்பனையை எட்டாமல் தோல்வி அடைந்த நிலையில், மின்சாரத்தில் இயங்கும் வகையிலான நுட்பத்தை பெற்ற நானோ காரை டாடா மோட்டார்ஸ் கோவையைச் சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்துள்ளது.
ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான நுட்பத்தை கொண்ட மோட்டார் மற்றும் பேட்டரி சார்ந்த அம்சங்களை எலக்ட்ரா இவி என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கின்றது.
எலக்ட்ரா EV நிறுவனத்திடமிருந்து நியோ (நானோ) காருக்கு 48 வோல்ட் மின்சார அமைப்புபொருத்தப்பட்டு அதிகபட்சமாக 17kW (23hp) ஆற்றலை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முழுமையான சிங்கிள் சார்ஜில் ஆராய் சான்றிதழின் படி 200 கிமீ பயணிக்கும் திறன் கொண்டதாகவும், அதுவே 4 நபர்களுடன் ஏசி போன்றவை இயக்கப்பட்டால் 140 கிமீ பயணிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் சார்ஜிங் நேரம் மற்றும் ரேஞ்ச் உள்ளிட்ட அம்சங்கள் அதிகார்வப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
வரவுள்ள மின்சாரக் காரில் டாடா பேட்ஜ் மற்றும் நானோ பேட்ஜ் ஆகியவை இடம்பெறாது என ஆட்டோகார் இந்தியா குறிப்பிட்டுள்ளது. எனவே இது முற்றிலும் மாறுபட்ட பிராண்டில் முதற்கட்டமாக டாக்ஸி சேவையை வழங்கும் ஓலா நிறுவனத்துக்கு 400 கார்களை வழங்க டாடா மோட்டார்ஸ் முடிவெடுத்துள்ளது.
முதற்கட்டமாக டாக்ஸி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உள்ள நியோ காரை தொடர்ந்து மின்சாரத்தில் இயங்கும் வகையில் கூடுதல் ஆற்றல் மற்றும் வசதிகளை கொண்ட மாடல் டாடா நானோ EV என்ற பெயரில் தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வருகின்ற நவம்பர் 28ந் தேதி ஹைத்திராபாத் நகரில் நடைபெற உள்ள விழா ஒன்றில் நானோ காரின் அடிப்படையிலான ஜெயம் நியோ மின்சாரக் காரை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்ய உள்ளார்.