ரூ.7.31 லட்சம் ஆரம்ப விலையில் 2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோற்ற மேம்பாடுகளுடன் புதிய டிராகன் எஞ்சின் கொண்டமாக சந்தைக்கு வந்துள்ளது.
2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட்
முந்தைய விலையில் மாற்றங்கள் இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேம்பட்ட ஈக்கோஸ்போர்ட் தோற்ற அமைப்பில் பல்வேறு மாற்றங்களுடன் இன்டிரியர் அமைப்பில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய அம்சங்களை பெற்றிருக்கின்றது.
டிசைன்
ஈக்கோஸ்போர்ட் காரின் முகப்பு தோற்ற அமைப்பு இந்நிறுவனத்தின் பாரம்பரிய கிரில் அமைப்புடன் புராஜெக்டர் ஹெட்லேம்ப் உடன் கூடிய எல்இடி ரன்னிங் விளக்குகள், 17 அங்குல அலாய் வீல் ஆகியவற்றுடன் புதிதாக நீலம்,ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களை பெற்றுள்ளது.
பேஸ் வேரியன்டை தவிர மற்ற அனைத்து வேரியன்டிலும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சேர்க்கப்பட்டு SYNC3 அம்சத்துடன் ண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகியவற்றை பெற்றுள்ளது.
பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் ஏபிஎஸ், இபிடி மற்றும் முன்பக்க இரட்டை காற்றுப்பை அனைத்திலும் பெற்றுள்ளது. டாப் வேரியன்டில் பக்கவாட்டு மற்றும் கர்டெயின் காற்றுப்பை இடம்பெற்றுள்ளது.
ஈக்கோஸ்போர்ட் எஞ்சின்
புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடலில் புதிய 1.5 லிட்டர் Ti-VCT (Twin Independent Variable Camshaft Timing) 3 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 123 ஹெச்பி ஆற்றல் மற்றும் 150 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக வரவுள்ளது. இதுதவிர டீசல் எரிபொருள் தேர்வில் 100 ஹெச்பி குதிரைதிறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TDCi டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 205 என்எம் டார்க் வழங்குகின்றது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 17 கிமீ மற்றும் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மைலேஜ் லிட்டருக்கு 14.8 கிமீ மற்றும் டீசல் எஞ்சின் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 23 கிமீ ஆகும்.
போட்டியாளர்கள்
விற்பனையில் பிரசத்தி பெற்று விளங்கும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா டியூவி 300, டாடா நெக்ஸா , ஹோண்டா WR-V ஆகிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களுக்கு எதிராக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விலை பட்டியல்
Variants | பெட்ரோல் | டீசல் |
Ambiente | ரூ.7.31 லட்சம் | ரூ. 8.01 லட்சம் |
Trend | ரூ. 8.04 லட்சம் | ரூ. 8.71 லட்சம் |
Trend+ | ரூ. 9.34 லட்சம் (AT) | ரூ. 9.10 லட்சம் |
Titanium | ரூ.9.17 லட்சம் | ரூ. 9.85 லட்சம் |
Titanium+ | ரூ.10.99 லட்சம் (AT) | ரூ. 10.67 லட்சம் |
( எக்ஸ்-ஷோரூம் டெல்லி )