பண்டிகை காலத்தை முன்னிட்டு பரவலாக மோட்டார் வாகன விற்பனை அதிகரித்திருந்த முந்தைய மாதத்தை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் சீரான வளர்ச்சியை மோட்டார் துறை நிறுவனங்கள் பதிவு செய்துள்ளது. விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள கார்களின் பட்டியலில் தொடர்ந்து மாருதி சுஸூகி நிறுவனம் முன்னணியாக விளங்கி வருகின்றது.
டாப் 10 கார்கள் – அக்டோபர் 2017
புதிய தலைமுறை டிசையர் காருக்கு கிடைத்த அமோக ஆதரவை தொடர்ந்து 6 மாதங்களுக்கு குறைவான நாட்களில் ஒரு லட்சம் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்திருந்த நிலையில் அக்டோபரில் 20,610 கார்களை விற்பனை செய்து முதலிடத்தை பெற்றுள்ளது.
தொடர்ந்து சராசரியாக 6000 கார்கள் வரை மாதந்தோறும் விற்பனை ஆகி வரும் செலிரியோ கார் முந்தைய அக்டோபர் மாத முடிவில் 12,209 கார்களை விற்பனை செய்து 6வது இடத்தை பெற்றுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 கார் மற்றும் எலைட் ஐ20 ஆகிய கார்களும் பட்டியிலில் உள்ளது. இவற்றை தவிர பிரசத்தி பெற்ற ரெனோ க்விட் 9வது இடத்திலும், அதனை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ 6990 கார்கள் விற்பனை ஆகி இறுதி இடத்தை பெற்றுள்ளது.
விற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – அக்டோபர் 2017
வ. எண் | தயாரிப்பாளர் | அக்டோபர் – 2017 |
1. | மாருதி சுசூகி டிசையர் | 20,610 |
2. | மாருதி சுசூகி ஆல்டோ | 19,947 |
3. | மாருதி சுசூகி பலேனோ | 14,538 |
4. | ஹூண்டாய் கிராண்ட் ஐ10 | 14,417 |
5. | மாருதி சுசூகி வேகன்ஆர் | 13,043 |
6. | மாருதி செலிரியோ | 12,209 |
7. | மாருதி சுசூகி ஸ்விஃப்ட் | 12,057 |
8. | ஹூண்டாய் எலைட் ஐ20 | 9,484 |
9. | ரெனோ க்விட் | 8,136 |
10. | டாடா டியாகோ (Automobile Tamilan) | 6,099 |