இத்தாலி மிலன் நகரில் நடைபெற உள்ள EICMA 2017 கண்காட்சியில் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற பைக் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் டீசர் வாயிலாக தெரியவந்துள்ளது.
ஹீரோ இம்பல்ஸ் 250
வருகின்ற நவம்பர் 7 முதல் 12ந் தேதி வரை நடைபெற உள்ள இஐசிஎம்ஏ 2017 அரங்கில் புதிதாக ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையிலான வசதிகளை பெற்ற மிகவும் சவாலான மோட்டார் சைக்கிள் ஒன்றை ஹீரோ வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
You. Can’t. Miss. This. Stay tuned. #HeroAtEICMA2017 என தனது அதிகார்வப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் இரண்டு புதிய 150 சிசிக்கு கூடுதலான எஞ்சின் பெற்ற இருமாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், இதில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் மற்றும் ஃபேரிங் செய்யப்பட்ட மாடல் தவிர இந்த ஆஃப் ரோடு மாடலும் 250சிசி எஞ்சின் கொண்டதாக வெளியிடப்படலாம்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் ஆட்டோமொபைல் தமிழன் தளத்துடன்..!