இந்தியாவில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி காரில் கூடுதலாக புதிய பெட்ரோல் எஞ்சின் பெற்ற பிஎம்டபிள்யூ 330i GT M ஸ்போர்ட் கார் ரூ.49.40 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2017 பிஎம்டபிள்யூ 330i GT M ஸ்போர்ட்
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி வரிசையில் கூடுதலாக புதிய பெர்ஃபாமென்ஸ் ரக ஜிடி எம் ஸ்போர்ட் மாடல் வகையில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 252hp குதிரை திறன் வெளிப்படுத்துவதுடன், 350Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் ஆற்றலை பின்புற சக்கரங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
எம் ஸ்போர்ட்டிவ் மாடலில் கருப்பு நிற ஃபினிஷ் பெற்ற கிரிலுடன் 18 அங்குல அலாய் வீல் , எம் பேட்ஜ் மற்றும் க்ரோம் ஃபினிஷ் பெற்ற புகைப்போக்கி கொண்டிருக்கின்றது.
இன்டிரியரில் மிக நேர்த்தியான 10.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் எம் ஸ்போர்ட் காரில் மல்டி வசதியை பெற்ற ஸ்டீயரிங் வீல், எம் பேட்ஜ், கிரே நிறத்தை பெற்றதாகவும் கிடைக்கின்றது.
பிஎம்டபிள்யூ 330i ஜிடி எம் ஸ்போர்ட் காரில் 6 காற்றுப்பைகள், ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.
இந்தியாவில் 2017 பிஎம்டபிள்யூ 330i GT M ஸ்போர்ட் கார் ரூ.49.90 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.