புதிய வருடத்தில் புதிதாக பல கார்கள் வரவுள்ளன இந்தியாவில் குறைந்தபட்சம் 30 கார்களுக்கு அதிகமாக வெளிவரும் என எதிர்பார்க்கலாம் . நடுத்தர மக்களின் கனவினை நினைவாக்குமா 2013 ஆம் வருடத்தின் புதிய வரவு கார்கள் என்பதனை மட்டும் கான்போம்.
1. செவர்லே பீட் face-lifted
2012 பாரீஸ் மோட்டார் ஸோவில் செவர்லே பீட் பேஸ்லிப்ட் கார் வருகிற மார்ச் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜின் 1.0 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினியில் வெளிவரலாம்.
விலை 4 முதல் 5.5 லட்சம்
2. டாடா நானோ
டாடா நானோ கார்கள் மிகச் சிறப்பான வரவேற்பினை பெறவில்லை என்றாலும் அதன் அடுத்தக் கட்ட நகர்வுகளுக்கு டாடா நானோவின் டீசல் பல மாற்றங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். அவற்றில் CRDI பொருத்தப்பட்டிருக்கலாம்.விலை 2.2 முதல் 2.8 லட்சம்.
3. மாருதி சுசுகி A-ஸ்டார் facelifted
மாருதி சுசுகி ஏ-ஸ்டார் வருகிற மார்ச் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதன் சக்தி 68PS @6200rpm மற்றும் டார்க் 90nm @3500rpm.
விலை 3.5 முதல் 4.5 லட்சம்
4. மஹிந்திரா E20
மஹிந்திரா E20 எலெக்ட்ரிக் கார் வருகிற அக்டோபர் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை 5.5 முதல் 6 லட்சம்
5. போக்ஸ்வேகன் அப்(UP)
வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அப் மாடல் கார் ஜூன் மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை 4 முதல் 5.5 லட்சம்
6. நிசான் டேட்சன்
நிசான் டேட்சன் ப்ரான்ட் கார்கள் 2013 ஆம் வருடத்தில் வெளியிடலாம். இந்த கார்கள் நடுத்தர மக்களினை மையமாக கொண்டு வரும்.
விலை 4 முதல் 5.5 லட்சம்
*பட
ங்கள் மற்றும் விலைகள் மாறுதலுக்குட்ப்பட்டவை
ங்கள் மற்றும் விலைகள் மாறுதலுக்குட்ப்பட்டவை