இந்தியாவின் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் குர்கா எஸ்யூவி மாடலில் பிஎஸ் 4 எஞ்சினை பெற்ற புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் மற்றும் 2 வீல் டிரைவ் என இரண்டிலும் கிடைக்கின்றது.
2017 ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி
குர்கா எஸ்யூவி மாடலில் உயர் வகை ஸ்டீல் பயன்படுத்துப்பட்டு C-in-C மல்டி லிங்க் காயில் ஸ்பிரிங் பெற்ற இந்தியாவில் முதல் ஆஃப் ரோடர் மாடலாக விளங்கும் குர்கா எஸ்யூவி காரில் எக்ஸ்பிடியேசன் மற்றும் எக்ஸ்புளோரர் என இருவகைகளில் கிடைக்கின்ற இந்த மாடலில் சாஃப்ட் டாப் மற்றும் ஹார்ட் டாப் ஆகிய வகைகளில் 3 மற்றும் 5 கதவுகளுடன் 5 முதல் 8 இருக்கை வசதியை பெற்றுள்ளது.
85 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.6 லிட்டர் டீசல் எஞ்சினை பெற்றுள்ள குர்கா எஸ்யூவி டார்க் 230 என்எம் கொண்டதாக உள்ள எஞ்சின் பாரத் ஸ்டேஜ் 4 பெற்றதாக வந்துள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மெர்சிடிஸ் -பென்ஸ் ஜி வேகன் எஸ்யூவி உந்துதலில் வடிவமைக்கபட்ட இந்த எஸ்யூவி கருப்பு, சில்வர், வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களுடன் கிடைக்கின்றது.
குர்கா எஸ்யூவி விலை பட்டியல்
ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்பிடியேசன் (5 டோர்) – ரூ. 8,36,272
ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்புளோரர் (5 டோர்) – ரூ.11,48,017
ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்புளோரர் (3 டோர்) – ரூ.9,23,621