இரண்டாம் தலைமுறை 2018 நிசான் லீஃப் மின்சார கார் பல்வேறு சிறப்பம்சங்களுடன் முந்தைய தலைமுறை மாடலை விட மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிமீ தொலைவு வரை பயணிக்கும் திறன் பெற்றிருக்கின்றது.
2018 நிசான் லீஃப் பேட்டரி கார்
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனையில் உள்ள பிரசத்தி பெற்ற மின்சார கார்களில் ஒன்றான முதல் தலைமுறை லீஃப் கார் 2010 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஜப்பான் நாட்டில் வெளியாகியுள்ள இரண்டாம் தலைமுறை நிசான் லீஃப் விரைவில் பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.
விற்பனையில் உள்ள புதிய தலைமுறை மைக்ரா காரின் தோற்ற பின்னணியை கொண்டதாக ஏரோடைனமிக் அம்சத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட மாடலாக வந்துள்ள புதிய லீஃப் காரின் முகப்பில் மிக நேர்த்தியான கிரில் அமைப்பு காற்றினை ஏரோடைனமிக்ஸ் முறையில் கையாளுவதற்கு ஏற்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
நிசான் லீஃப் பவர்ட்ரெயின்
40-kWh லித்தியம் ஐன் பேட்டரி கொண்டு இயங்கும் வகையில் பெற்றுள்ள இந்த மாடல் அதிகபட்சமாக 148 bhp பவரை வெளிப்படுத்துவதுடன் 320 Nm டார்க்கினை வழங்குகின்றது. முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 400 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டிருக்கின்றது.
க்விக் சார்ஜிங் வசதி பெற்றுள்ள நிசான் லீஃப் காரின் 80 சதவீத பேட்டரி சார்ஜ் ஏறுவதற்கு வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாகும். முழுமையான சார்ஜ் பெறுவதற்கு 3kW உள்ள மின் திறன் பெற்றிருந்தால் 16 மணி நேரமும், 6kW உள்ள மின் திறன் பெற்றிருந்தால் 8 மணி நேரமும் போதுமானதாகும்.
நிசான் புரோபைலட் சிஸ்டம்
நிசான் லீஃப் காரில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான செமி ஆட்டோமேட்டிக் அம்சமான ப்ரோபைலட் சிஸ்டம் வாயிலாக மிக எளிமையாக சிக்கலான பார்க்கிங் இடத்தில் வாகனத்தை நிறுத்த மற்றும் எடுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும். மேலும் இந்த சிஸ்டத்தில் பொருத்தப்பட்டுள்ள 12 அல்ட்ராசோனிக் சென்சார்கள் நெடுஞ்சாலையில் தானியங்கி முறையில் இயக்க மணிக்கு 30 கிமீ முதல் 100 கிமீ வேகம் வரை தானாகவே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த காரில் அமைந்து இ-பெடல் முறையினால் வாகனத்தின் வேகத்தை அதிகரிக்க , குறைக்க, முழுமையாக நிறுத்த ஆக்சிலரேட்டர் இ-பெடல் போதுமானதாகும். இந்த பெடலின் காரணமாக 90 சதவீத டிரைவர் வேலை மிச்சமாகும்.
வருகை
வருகின்ற அக்டோபர் முதல் ஜப்பான் சந்தையிலும் ஐரோப்பா,அமெரிக்கா உள்ளிட்ட சந்தைகளில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு செல்ல உள்ள 2018 நிசான் லீஃப் பேட்டரி கார் இந்தியாவில் அடுத்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.