பெர்ஃபாமென்ஸ் ரக மாடல்களில் பிரசத்தி பெற்று விளங்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்டின் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT-R மற்றும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT ரோட்ஸ்டெர் என இரு சூப்பர் கார் மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
சமீபத்தில் இந்தியாவின் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் டிராக்கில் மிக வேகமாக லேப் நிறைவு செய்து புதிய சாதனையை பதிவு செய்த 2:09.853 நேரத்தில் GT-R பதிவு செய்துள்ளது. ரூ.2.19 கோடியில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT ரோட்ஸ்டெர் மாடலும் மற்றும் ரூ.2.23 கோடியில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT-R விற்பனைக்கு வந்துள்ளது.
மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT-R
மெர்சிடிஸ் ஏஎம்ஜி GT-R ஸ்போர்ட்ஸ் கார் Beast of the Green Hell என்கின்ற டேக்லைனுடன் வெளியிடப்பட்டுள்ள 4.0 லிட்டர் V8 பைடர்போ என்ஜின் 577 hp ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றும் இழுவைதிறன் 700 Nm ஆகும். 7 வேக டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
AMG GT-R ஸ்டீரிட் லீகல் ஸ்போர்ட்ஸ் கார் உச்ச வேகம் மணிக்கு 318 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 3.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். விற்பனையில் உள்ள ஜிடி எஸ் காரை விட 8 கிமீ வேகம் கூடுதலாகுவும் , 0 முதல் 100 கிமீ வேகத்தினை 0.2 விநாடிகள் குறைவான நேரத்திலும் எட்டும்.
மிகச்சிறப்பான ஸ்டைலிங் தாத்பரியங்களை கொண்ட மாடலாக வெளியாகியுள்ள AMG GT-R மாடலில் சிறப்பான முன்பக்க கிரில் அமைப்பு , பக்கவாட்டில் அமைந்துள்ள 10 ஸ்போக் கொண்ட 20 இன்ச் ஃபோர்ஜ்டு அலாய் வீல் , பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு , டபுள் ரியர் டிஃப்யூசர் என பலவற்றை பெற்றுள்ளது.
மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT ரோட்ஸ்டெர்
ஜிடி ஆர் மாடலை போலவே அமைந்துள்ள கன்வெர்டிபிள் ரோட்ஸ்டெர் காரில் பவர்ஃபுல்லான 476 hp பவரை அதிகபட்சமாக வெளிப்படுத்தும் 4.0 லிட்டர் V8 பைடர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 630 Nm ஆகும். இதில் 7 வேக டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
AMG GT-R ரோட்ஸ்டெர் ஸ்போர்ட்ஸ் கார் உச்ச வேகம் மணிக்கு 302 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 4.0 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
இரு இருக்கை ஆப்ஷனுடன் 5 விதமான டிரைவிங் மோடினை பெற்றதாக 19 இன்ச் ஃபோர்ஜ்டு அலாய் வீல் மற்றும் 20 இன்ச் ஃபோர்ஜ்டு அலாய் வீல் பெற்றதாக கிடைக்கின்றது.
விலை பட்டியல்
மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT-R – ரூ. 2.23 கோடி
மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT ரோட்ஸ்டெர் – – ரூ. 2.19 கோடி
(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)