நிசான் இந்தியா நிறுவனம் நமது நாட்டில் டட்சன் மற்றும் நிசான் பிராண்டுகளில் கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. நிசான் புத்தாக்க நடவடிக்கைகளில் ஒன்றான நீரை சேமிக்கும் வகையிலான நீரில்லாத வாட்டர் வாஷ் முறையை செயல்படுத்த சிறப்பு முகாமை தொடங்கியுள்ளது.
நீரில்லாத வாட்டர் வாஷ்
ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 24, 2017 வரை நாடு முழுவதும் உள்ள 148 நிசான் டீலர்களில் சிறப்பு வாட்டர் வாஷ் முகாமை ஹேப்பி வித் நிசான் என்ற பெயரில் தொடங்கியுள்ளது. இந்த முகாமில் நீரில்லாமல் கார்களை சுத்தம் செய்வதற்கான நுட்பத்தினை செயல்படுத்துகின்றது.
கார் வாஷ் செய்வதற்கான உபகரணங்களை கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற இந்த நுட்பத்தினால் கூடுதலான தண்ணீர் அவசியமில்லாமல் கார்களை சுத்தம் செய்யலாம், இந்த நுட்பத்தின் வாயிலாக இந்த 8 நாட்களில் 2.8 மில்லியன் லிட்டர் நீரை சேமிக்க இயலும், எனவே இந்ந முறையினால் ஆண்டிற்கு 130 மில்லியன் லிட்டர் நீரை சேமிக்கலாம் என நிசான் தெரிவிக்கின்றது.
நீரில்லாத வாட்டர் வாஷ் முறையை அறிமுகம் செய்து வைத்து பேசிய இந்தியா நிசான் தலைவர் அருன் மல்கோத்ரா கூறுகையில் வாடிக்கையாளர்களுக்கு மிக சிறப்பான சேவையை வழங்கும் வகையிலான சிறப்பு சர்வீஸ் முகாமில் 60 பாயின்ட் இலவச செக்-கப் ஆகியவற்றுடன் நீரில்லாத வாட்டர் வாஷ், 20 % லேபர் சார்ஜ் மற்றும் ஆக்செரீஸ்கள் சலுகைகளை செயல்படுத்துவதாக கூறியுள்ளார்.