டீசல் விலை குறைவு என்ற மாயை மெல்ல மறைந்து வருவதனை உறுதி செய்யும் வகையில் டீசல் கார் விற்பனை இந்தியளவில் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளதாக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
பெட்ரோல் கார்களை விட கூடுதலான சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்த வல்ல டீசல் கார்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசுகள் சர்வதேச அளவில் மேற்கொண்டு வரும் நிலையில் இந்தியா மட்டுமல்ல பல்வேறு உலக நாடுகளிலும் டீசல் கார் விற்பனை தொடரந்து வீழ்ச்சி அடைந்து வருகின்றது.
டீசல் கார் விற்பனை சரிவு
கடந்த 2012-2013 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த வாகன விற்பனையில் டீசல் கார்களின் பங்களிப்பு 47 சதவிகிதமாக இருந்த சூழ்நிலையில் 2016-2017 ஆம் ஆண்டின் முடிவில் 27 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
டீசல் கார்கள் விற்பனை சரிவு நிலவரம் 2012-13 வரையிலான காலகட்டத்தில் 47 சதவிகிதமாக, இருந்து வந்த நிலையில் 42 சதவிகிதமாக 2013-14 ஆண்டிலும், 37 சதவிகிதமாக 2014-15, 34 சதவிகிதமாக 2015-16 ஆனால் மிகப்பெரிய வீழ்ச்சியாக 2016-2017 ஆம் ஆண்டின் முடிவில் 27 சதவிகிதமாக வந்தடைந்துள்ளது.
ஆனால் இதே காலகட்டத்தில் பெட்ரோல் கார் விற்பனை 2016-17 முடிவில் 73 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2015-2016 காலகட்டத்தில் 66 சதவிகிதமாக, 2014-15 காலகட்டத்தில் 63 % இருந்தது, 2012-13 காலகட்டத்தில் பெட்ரோல் கார் விற்பனை 58 சதவிகிதமாக உள்ளது.
வருடம் | பெட்ரோல் | டீசல் |
2012-2013 | 53 % | 47 % |
2013-2014 | 58 % | 42 % |
2014-2015 | 63 % | 37 % |
2015-2016 | 66 % | 34 % |
2016-2017 | 73 % | 27 % |
சமீபத்தில் டெல்லி , கேரளா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் டீசல் கார்களுக்கு தடை மற்றும்ப புதிய வாகனங்கள் பதிவு செய்வதில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்ததை தொடர்ந்து டீசல் கார்கள் மீதான ஆர்வம் வெகுவாக குறைய தொடங்கியுள்ளது.