முதல் தலைமுறை
1996 ஆம் ஆண்டில் ஸ்கார்பியோ காருக்கான அடித்தளம் ஆரம்பமாகியது.சுமார் 600 கோடி முதலீட்டில் உருவானதுதான் ஸ்கார்பியோ.
2002 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பியோ தொடர்ந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.மேலும் தொடர்ந்து விற்பனையிலும் சிறப்பாக உள்ளது.
இரண்டாம் தலைமுறை
2006 ஆம் ஆண்டில் சில உட்ப்பற மற்றும் வெளிப்புற மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் பெயர் ஆல் நியூ ஸ்கார்பியோ.
2006 டில்லி ஆட்டோ எக்ஸ்போ ஹைபிரிட் நுட்பத்துடன் வரவுள்ள காரினை பார்வைக்கு வைத்தது. மேலும் பிக்-அப் ஸ்கார்பியோவாக உருவாக்க துவங்கியது.
2007 ஆம் ஆண்டில் பிக்-அப் டிரக் ஸ்கார்பியோ அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பெயர் ஸ்கார்பியோ கேட்வே ஆகும்.
2007 ஆம் ஆண்டின் இறுதியில் m-Hawk டீசர் அறிமுகம் செய்யப்பட்டது.
மூன்றாம் தலைமுறை
2008 ஆம் ஆண்டில் டீசல் எலெக்ட்ரிக்-ஹைபிரிட் உருவாக்கப்பட்டது.மேலும் 6 ஸ்பீடு ஆட்டோமொட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அறிமுகம் செய்யப்பட்டது.
பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக ABS,காற்றுப்பை போன்றவை.
பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஸ்கார்பியோ ஏற்றுமதி செய்யப்படுகிறது.