மிக நேர்த்தியான மற்றும் கம்பீரமான எஸ்யூவி மாடலாக களமிறங்கியுள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஆரம்ப விலை ரூ. லட்சம் ஆகும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் காம்பஸ் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது.
காம்பஸ் எஸ்யூவி
பிரசத்தி பெற்ற ஜீப் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு மிகவும் சவாலான விலையில் போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. ஐந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ள நிலையில் ஆரம்ப கட்டத்தில் டீசல் மாடல்கள் டெலிவரி தொடங்கப்படும், காலதாமதமாக பெட்ரோல் கார்கள் தீபாவளி-க்கு முன்னதாக டெலிவரி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசைன்
உறுதியான கட்டுமானத்ததை பெற்ற ஜீப் நிறுவனத்தின் பாரம்பரிய கிரில் முகப்புடன் கம்பீரமாக காட்சியளிக்கின்ற இந்த மாடலில் மிகவும் ஸ்டைஙிசான முகப்பு விளக்குகள் இணைக்கப்பட்டுள்ளது. மிதக்கும் வகையிலான மேற்கூறையை கொண்டதாக மிகவும் உயரமான தோற்ற அமைப்பினை வெளிப்படுத்தும் நவீன டைமன்ட் கட் அலாய் வீல் பெற்றதாக உயர்ந்த தரத்துடன் கூடிய 17 அங்குல அலாய் வீலை கொண்டுள்ளது.
வெள்ளை, கருப்பு, நீலம், கிரே மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் காம்பஸ் எஸ்யூவி கிடைக்க உள்ளது.
இன்டிரியர் அமைப்பில் பல்வேறு வசதிகளுடன் கூடிய அம்சங்களை பெற்ற காம்பஸ் மாடலில் மிக அகலமான யூ கனெக்ட் தொடுதிரை அமைப்பில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
எஞ்சின்
காம்பஸ் எஸ்யுவி மாடலில் 160 hp ஆற்றலுடன் 350 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
டீசல் எஞ்சின் 4X2 மைலேஜ் லிட்டருக்கு 17.1 கிமீ
டீசல் எஞ்சின் 4X4 மைலேஜ் லிட்டருக்கு 16.3 கிமீ
மேலும் 170 hp பவருடன், 260 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 7 வேக டூயல் கிளட்ச் கியராபாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
பெட்ரோல் எஞ்சின் 4X2 மைலேஜ் லிட்டருக்கு 16.3 கிமீ
இரு எஞ்சின் மாடல்களிலும் 4×4 டிரைவ் , 4×2 டிரைவ் என இருவிதமான வகைகளில் கிடைக்க உள்ளது. 4×4 பெற்ற மாடலில் தானியங்கி,பனி,மனல் மற்றும் சேறு என மொத்தம் நான்கு வகையான டிரைவிவ் மோட் இடம்பெற்றுள்ளது.
வேரியண்ட்
பேஸ் வேரியண்ட் Sport, மிட் வேரியண்ட் Longitude, Longitude(O), டாப் வேரியன்ட் Limited மற்றும் Limited(O) என மொத்தம் 3 வகையில் 5 விதமான வேரியன்ட்களில் கிடைக்க பெற உள்ளது. டாப் வேரியண்டில் ஆல் வீல் டிரைவ் , இரு வண்ண கலவை உள்ளிட்ட வசதிகளுடன் HID முகப்பு விளக்குகள், அதிகபட்சமாக 6 காற்றுப்பைகள் வரை பெற்றுள்ளது.
போட்டியாளர்கள்
ஹூண்டாய் டூஸான், ஹோண்டா சிஆர்-வி , எக்ஸ்யூவி500 போன்ற மாடல்களுக்குநேரடி போட்டியாகவும் , ஃபார்ச்சூனர், எண்டேவர், பஜரோ போன்றவற்றுக்கும் சவாலாக காம்பாஸ் எஸ்யூவி விளங்கும்.
சர்வீஸ் மற்றும் வாரண்டி
ஒவ்வொரு 15,000 கிமீ அல்லது ஒரு வருட இடைவெளியில் சர்வீஸ் மேற்கொள்வது அவசியம், 3 வருடம் அல்லது ஒரு லட்சம் கிமீ வரை வாரண்டி வழங்கப்பட்டுள்ளது. 48 மோபர் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்கள் பெற்றுள்ளது.
ஜீப் காம்பஸ் விலை பட்டியல்
வேரியன்ட் | பெட்ரோல் | டீசல் |
Sport | ரூ.14.95 லட்சம் | ரூ.15.45 லட்சம் |
Longitude | – | ரூ.16.45 லட்சம் |
Longitude(O) | ரூ.17.25 லட்சம் | |
Limited | ரூ.18.70 லட்சம் (AT) | ரூ.18.05 லட்சம் |
Limited(O) | ரூ.19.40 லட்சம் (AT) | ரூ.18.75 லட்சம் |
Limited 4×4 | – | ரூ.19.40 லட்சம் |
Limited 4×4 (O) | – | ரூ.20.65 லட்சம் |
(எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை)