மாருதி ஆல்டோ கே10 மற்றும் ரெனோ க்விட் 1.0L போன்ற மாடல்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டுள்ள கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் டட்சன் ரெடி-கோ 1.0L மாடல் விலை ரூ. 3.57 லட்சம் ஆகும்.
டட்சன் ரெடி-கோ 1.0L
T(O) மற்றும் S என இரு வகையான வேரியன்ட்களில் கிடைக்க பெற உள்ள ரெடி-கோ மாடலில் க்விட் காரில் இடம்பெற்றிருக்கின்ற அதே 1.0 லிட்டர் எஞ்சின் i-SAT’ a.k.a. Intelligent Spark Automated Technology என்ற பெயரில் 1.0 லி மாடலில் 3 சிலிண்டர் பெற்ற 999சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபடசமாக 68 hp பவரை 5,500rpm சுழற்சியில் வெளிப்படுத்துவதுடன், 91 Nm டார்கினை 4250 rpm வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 22.5 கிமீ ஆகும்.
சாதாரன 8.0 லிட்டர் மாடலுக்கும், 1.0 லிட்டர் மாடல்களுக்கு வித்தியாசமே 1.0 லிட்டர் பேட்ஜ் மட்டுமே மற்றபடி தோற்ற அமைப்பில் எந்த ஆற்றங்களும் இடம்பெறவில்லை. இன்டிரியர் அமைப்பில் கருப்பு நிற வண்ணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தீம் பெற்றிருக்கின்றது.
T(O) மற்றும் S ஆகிய இரு விதமான வேரியண்டில் கிடைக்க உள்ள இந்த மாடலில் எஸ் வேரியண்டில் மட்டும் ஒட்டுநர் பக்க காற்றுப்பை வழங்கப்பட்டுள்ளது. 2 டின் ஆடியோ சிஸ்டத்தை கொண்டுள்ளதை தவிர கருப்பு வண்ண இன்டிரியர், பவர் ஸ்டீயரிங் , ஏசி போன்றவற்றை கொண்டுள்ளது.
டட்சன் ரெடி-கோ 1.0L விலை ரூ.3.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)