33 வருடங்களாக விற்பனையில் உள்ள மெர்சிடிஸ் ஜி63 ஏஎம்ஜி முன்பு ஜி55 ஏஎம்ஜி என அழைக்கப்பட்டது. இதனை ஜி-க்ளாஸ் எஸ்யூவி எனவும் அழைப்பர். மேலும் ஜி-வேகன் எனவும் சொல்லாம். 33 வருடங்களாக விற்பனையில் உள்ள ஜி-வேகன் எஸ்யூவி காரில் பெரிதாக வெளிபுற தோற்றத்தில் மாற்றம் செய்யவில்லையாம்.
தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜி-க்ளாஸ் காரில் பல புதிய நுட்ப வசதிகள் மற்றும் உட்புற கட்டுமானத்தில் மட்டும் சில மாற்றங்களை தந்துள்ளது.அதைவிட முக்கியமானது எஞ்சின் புதிதாக மாற்றியுள்ளது.
ஜி வேகன் என்ஜின்
5.5 லிட்டர் வி8 ட்வீன்-டர்போசார்ஜடு என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் சக்தி 544BHP @ 5500rpm மற்றும் டார்க் 760NM @5000 rpm ஆகும். இதன் ட்ரான்ஸ்மிஷன் 7ஜிடரானிக் 7 ஸ்பீடு க்யர்பாக்ஸ் ஆகும். 5.5 விநாடிகளில் 0-100கீமி வேகத்தை தொடும்.
ஜி63 ஏஎம்ஜி காரில் உள்ள பல புதிய வசதிகள் ஈகோ முறையில் ஆன்/ஆஃப் பட்டன், ஏஎம்ஜி சிறப்பான பிரேக்,ஏஎம்ஜி ஸ்போர்ட் புகைப்போக்கி, ESP (electronic stability program), ESPயில் ரிவர்ஸ் செல்லவும் உதவும்.மலையேற உதவி,பார்க்கிங் செய்ய பார்க்கட்ரானிக்.
ஜி63 ஏஎம்ஜி எஸ்யூவி கார் விலை 1.45கோடி (மும்பை விலை)