பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தங்களுடைய இரு சக்கர வாகனங்கள் விலையை ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பிறகு குறைத்துள்ளது. குறிப்பாக பல்சர் ஆர்எஸ் 200 பைக் விலை ரூ. 4000 வரை அதிகபட்சமாக குறைத்துள்ளது.
பஜாஜ் பைக்குகள் – ஜிஎஸ்டி
குறைந்ந்தபட்சமாக பெரும்பாலான மோட்டார்சைக்கிள்கள் விலை ரூ.400 முதல் 1800 வரை குறைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பிரிமியம் ரக 200 சிசி முதல் 350சிசி க்குள் இருக்கின்ற சில நிறுவனங்களின் மாடல்கள் அதிகபட்சமாக ரூ. 4000 வரை குறைக்கப்பட்டுள்ளது.
350சிசி க்கு மேற்பட்ட மாடல்களின் விலை சில ஆயரம் ரூபாய்கள் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பிரிமியம் ரக மாடல்கள் விலை உயரத்தப்பட்டுள்ளது.
பல்சர் வரிசை மாடல்களின் முழுவிலை பட்டியல்
மாடல்கள் | தமிழ்நாடு (எக்ஸ்-ஷோரூம்) | புதுச்சேரி (எக்ஸ்-ஷோரூம்) |
பஜாஜ் பல்சர் 135 LS | ரூ. 61,224 | ரூ. 59,006 |
பஜாஜ் பல்சர் 150 | ரூ. 75,495 | ரூ. 72,855 |
பஜாஜ் பல்சர் NS160 | ரூ. 81,444 | -(Automobiletamilan) |
பஜாஜ் பல்சர் 180 | ரூ. 80,034 | ரூ. 77,275 |
பஜாஜ் பல்சர் 220F | ரூ. 91,786 | ரூ. 88,425 |
பஜாஜ் பல்சர் RS200 | ரூ. 1,22,121 | ரூ. 1,17,880 |
பஜாஜ் பல்சர் RS200 ABS | ரூ.1,33,975 | ரூ.1,29,401 |
பஜாஜ் நிறுவனத்தின் மிகவும் குறைந்த விலை சிடி 100 பி மாடல் முதல் க்ரூஸர் ரக அவென்ஜர் வரை உள்ள மாடல்களின் முழுமையான விலை பட்டியலை இங்கே காணலாம்.
மாடல்கள் | தமிழ்நாடு (எக்ஸ்-ஷோரூம்) | புதுச்சேரி (எக்ஸ்-ஷோரூம்) |
CT100B | ரூ. 31,712 | ரூ.31,748 |
CT100 ஸ்போக் | ரூ. 34,142 | ரூ.34,189 |
CT100 அலாய் | ரூ. 36,091 (Automobile Tamilan) | ரூ.37,551 |
பிளாட்டினா ஸ்போக் | ரூ. 43,054 | ரூ.41,486 |
பிளாட்டினா அலாய் | ரூ. 46,047 | ரூ.44,362 |
டிஸ்கவர் 125 டிரம் | ரூ. 52,067 | ரூ.50,196 |
டிஸ்கவர் 125 டிஸ்க் | ரூ. 54,048 | ரூ.52,115 |
பஜாஜ் V12 டிரம் | ரூ. 58,736 | ரூ.54,998 |
பஜாஜ் V12 டிஸ்க் | ரூ. 61,032 | ரூ.57,877 |
பஜாஜ் V15 | ரூ. 63,032 | ரூ.60,756 |
அவென்ஜர் 150 | ரூ. 79,707 | ரூ.76,701 |
அவென்ஜர் 220 ஸ்டீரிட் | ரூ.87,971 | ரூ.84,712 |
அவென்ஜர் 220 க்ரூஸ் | ரூ. 87,971 | ரூ.84,712 |
பஜாஜின் மற்றொரு விலை உயர்த்தப்படக்கூடிய மாடலான டாமினார் 400 பைக் விலை அதிகார்வப்பூர்வமாக இதுவரை அதிகரிக்கப்படவில்லை, இருந்தபோதும் அதிகபட்சமாக முந்தைய விலையை விட ரூ. 1000 -ரூ.2000 வரை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.
குறிப்பு – கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விலை பட்டியல் விபரங்கள் டீலர்களை பொறுத்து மாறுபடலாம். மேலதிக மற்றும் சரியான விலையை பெற டீலர்களை அனுகவும்.