கேடிஎம் நிறுவனத்தின் சார்பாக இரண்டாவது ஆரஞ்ச தினம் சில நாட்களுக்கு முன் மும்பையில் கொண்டாடப்பட்டது. கேடிஎம் ஆரஞ்ச நாளில் கேடிஎம் பைக் உரிமையாளர்கள் மற்றும் பைக் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஆரஞ்ச தினத்தில் கேடிஎம் பைக்களின் சர்வீஸ் கேம்ப் மற்றும் ஸ்டன்ட் ஷோ என பல விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த ஆரஞ்ச தினத்தில் கேடிஎம் இந்தியா பைக் பிரிவு ஆஃப் ரோடு பைக்கினே பார்வைக்கு வைத்தது. பார்வைக்கு வைக்கப்பட்ட கேடிஎம் 350 எஸ்எக்ஸ்-எஃப் பைக்கில் 349.7சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆஃப் ரோடு பைக் இந்தியா முழுவதும் உள்ள 25 கேடிஎம் ஷோரூம்களில் காட்சிவைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கினை இந்தியாவில் அறிமுகம் செய்யவதற்க்கு தற்பொழுது வாய்ப்பில்லை என்றும் உறுதிபடுத்தியுள்ளனர்.