பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து பிஎஸ் 3 எஞ்சின் பொருத்தப்பட்ட ஹிமாலயன் பைக்குகள் விற்பனையை முற்றிலுமாக ராயல் என்ஃபீல்டு நிறுத்தியிருந்தாலும், பல்வேறு குறைகள் சொல்லப்பட்டிருந்த நிலையில் அவற்றை நீக்குவதற்கும் எஃப்ஐ வசதியுடன் கூடிய பிஎஸ் 4 எஞ்சினுடன் அறிமுகம் செய்வதற்காக மேம்பாட்டு பணிகளை ராயல் என்ஃபீல்டு மேற்கொண்டு வருவதால் தற்காலிகமாக டெலிவரியை நிறுத்தி வைத்துள்ளது.
ஆனால் டீலர்களிடம் தொடர்ந்து ராயல் என்ஃபீலடு ஹிமாலயன் அட்வென்ச்சர் ரக மாடலுக்கு முன்பதிவு நடந்து வருகின்றது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 2 மாதங்கள் என கூறப்பட்டிருப்பதனால், ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட மாத தொடக்க வாரங்களில் புதிய மேம்படுத்தப்பட்ட ஹிமாலயன் பைக் பிஎஸ் 4 எஞ்சினுடன், ஏபிஎஸ் போன்றவற்றை பெற்றதாக அறிமுகம் செய்யப்படலாம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.