3 பைக்களின் சில பொதுவான அம்சங்கள் மைலேஜ் மிக சிறப்பாக இருக்கும். என்ஜினுக்கேற்ற சிறப்பான செயல்பாட்டை வெளிபடுத்தும்.
1. யமாஹா க்ரூஸ் பைக்
க்ரூஸ் பைக் நல்ல மைலேஜ் தரக்கூடிய பைக் தோற்றத்திலும் சிறப்பாகவே உள்ள பைக் ஆகும். க்ரூஸ் பைக் ஒரு மாறுபட்ட வகையில் மட்டும் உள்ளது.
106 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7.5 BHP ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 7.5NM ஆகும். 4 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ட்ரம் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உச்சகட்ட வேகம் மணிக்கு 93கீமி ஆகும்.
மைலேஜ் நெடுஞ்சாலை 74Kmpl
விலை மிககுறைவான சிறப்பான பைக்காகும்.
யமாஹா க்ரூஸ் விலை ; ரூ 38,268( சென்னை எக்ஸ்ஷோரூம் விலை)
2. ஹோன்டா ட்ரீம் யுகா
ட்ரீம் யுகா பைக்கில் மூன்று விதமான மாறுபட்ட வகைகள் உள்ளன. அவற்றில் கிக் ஸ்டார்ட் ஆலாய், கிக் ஸ்டார்ட் ஸ்போக், மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் ஆலாய் ஆகும். டியூப்லஸ் டயர் வசதி உள்ளது.
109 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.அதிகபட்சமாக 8.5 BHP ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 8.9NM ஆகும். 4 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ட்ரம் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உச்சகட்ட வேகம் மணிக்கு 95கீமி ஆகும்.
மைலேஜ் நெடுஞ்சாலை 72Kmpl
விலை குறைவான சிறப்பான பைக்காகும்
ஹோன்டா ட்ரீம் யுகா கிக் ஸ்டார்ட் ஆலாய் விலை ; ரூ 47,871
ஹோன்டா ட்ரீம் யுகா கிக் ஸ்டார்ட் ஸ்போக் விலை ; ரூ 49,390
3. பஜாஜ் டிஸ்கவர் 100T
டிஸ்கவர் 100T பைக் ஆனது டிஸ்கவர் 125ST பைக்கினை அடிப்படையாக கொண்டதாகும். சிறப்பாக கையாள முடியும்.
102 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.அதிகபட்சமாக 10.1BHP ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 9.2 NM ஆகும். 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ட்ரம் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உச்சகட்ட வேகம் மணிக்கு 100கீமி ஆகும்.
மைலேஜ் நகரம் 65Kmpl
மைலேஜ் நெடுஞ்சாலை 87Kmpl
விலை கூடுதலாக இருந்தாலும் சிறப்பான பைக்காகும்.
பஜாஜ் டிஸ்கவர் 100T விலை ; ரூ 50,500( தில்லி எக்ஸ்ஷோரூம் விலை)