குரூஸர் பைக் சந்தையில் புதிதாக களமிறங்க உள்ளது விக்டரி மோட்டார் சைக்கிள் பைக் போலரிஸ் நிறுவனத்தை தலைமையாக கொண்டு செயல்படும் விக்டரி மோட்டார் சைக்கிள்ஸ் இந்த வருடத்தின் இறுதியில் களமிறங்கும்.
அமெரிக்காவில் தனியான முத்திரையுடன் விளங்கிவரும் விக்டரி பைக் இந்தியாவில் முழுமையான வடிவமைப்பில் (CBU)விற்பனைக்கு வரும். முதல் கட்டமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்ய உள்ளது.
அமெரிக்காவின் பெரிய வீ டிவீன் எஞ்சின் என்ற பெயரில் வணிகமுத்திரையாக பயன்படுத்தும்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் விலை கூடுதலாகதான் இருக்கும். இறக்குமதி வாகனங்களுக்கான வரி அதிகம் என்பதால்தான்.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மிக சரியான சவாலை விடக்கூடிய பைக்காகும். அமெரிக்காவில் இரு நிறுவனங்களுக்கு இடையே மிக கடுமையான போட்டி இருக்குமாம்.