டயர் வாகனங்களுக்கான நிலையான நிலைப்பு தன்மை, சாலையில் பிடிப்பாக பயணிக்க, பிரேக்கிங் சமயத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும், மைலேஜ் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
1. டயர் ஆயுள்
டயரின் ஆயுள் வாகனத்தின் வகையை பொறுத்து மாறுதல் அடையும். ஹேட்ச்பேக் காரின் சராசரியாக டயர் ஆயுள் 40,000 கீமி வரை பயணிக்க முடியும். எஸ்யூவி கார்களின் டயர் 60,000 கீமி மேல் பயணிக்க முடியும். இவைகளும் தாங்கள் பயணிக்கும் சாலையின் தன்மைகளை பொறுத்து மாறலாம். மேலும் சரியான அழுத்தம் போன்றவறை பராமரிக்க தவறினாலும் ஆயுள் குறையும்.
டயர் தேர்வு
டயர் தேர்ந்தேடுப்பதில் கவனம் செலுத்துதல் அவசியம் உங்கள் வாகனங்களை பொறுத்து டயர் தேர்வு இருத்தல் மிக அவசியம். உங்கள் வாகனம் எஸ்யூவி என்றால் த்ரட் ஆழமாகவும் பேட்டரன் நல்ல அகலமாகவும் இருக்கும்.
ட்யூப்லெஸ் டயர் தேர்ந்தேடுப்பதே சிறந்தது.
டயர் விவர குறிப்புகள்
டயரின் முழுமையான விபரங்களை டயரில் பதிக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு அறியலாம். குறியீடுகளை கொண்டு மிக பொருத்தமான டயரினை தயாரிப்பாளர் பரிந்துரைத்த டயரினை வாங்கலாம்.
முதல் கட்டமாக இந்த படத்தில் உள்ள விவரங்களை கானலாம்
டயரில் உள்ள ஆங்கில எழுத்துகளின் விளக்கம்
Speed Symbol | Speed (km/h) | |
L | 120 | |
M | 130 | |
N | 140 | |
P | 150 | |
Q | 160 | |
R | 170 | |
S | 180 | |
T | 190 | |
U | 200 | |
H | 210 | |
V | 240 | |
W | 270 | |
Y ZR | 300 340மேல் |