லம்போர்கினி சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனம் 50வது ஆண்டு கொண்டாட்டத்தில் உள்ளது. 83வது ஜெனிவா மோட்டார் ஷோவில் லம்போர்கினி வெனினோ ஹைப்பர் காரை பார்வைக்கு வைக்கின்றது.
இந்த சூப்பர் கார் லம்போர்கினி அவென்டேடார் காரினை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. லம்போர்கினி வெனினோ கார் மூன்று கார்களை விற்பனை செய்துள்ளனர். இதன் விலை ரூ 21.4 கோடி ஆகும்.
லம்போர்கினி வேனினோ தொடர்ந்து சோதனையில் உள்ளது. இந்த காரினை ஸ்டீரிட் லிகல் ரேஸிங் கார் என லம்போர்கினி அழைக்கின்றது.
வேனினோ கார் 740எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.