உற்பத்தி மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக கார் தயாரிப்பு செலவு உயருகின்றது. மேலும் தற்பொழுதைய பட்ஜெட் வரி உயர்வு முக்கிய காரனியாகும். பட்ஜெட்டில் இறக்குமதி கார்களுக்கான வரியை அதிகரித்துள்ளதை அறிவோம்.
இந்தியாவிலே அசெம்பிளிங் செய்யப்படும் கார்களுக்கு 1- 4 சதவீதம் வரை உயர்வு இருக்கும். முழுதும் வடிவமைக்கப்பட இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 20 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும்.
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரின் விலை ரூ.58 இலட்சம் வரை உயருகின்றது.
ஆடி நிறுவனமும் விலை உயர்வை அறிவித்துள்ளது. சில குறிப்பிட்ட கார்களுக்கு மட்டும் விலை உயர்வை அறிவித்துள்ளது. குறிப்பாக ஆடி க்யூ 5 ரேஞ்ச் கார்களுக்கு 2.5 சதவீதம் வரை உயர்கின்றது.
ஆடி ஆர்எஸ்5 மற்றும் ஆடி ஆர்8 கார்களுக்கு 15 சதவீதம் வரை உயர்கின்றது. மார்ச் 16 முதல் ஆடி கார்களின் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.