42 ஆண்டுகால வரலாற்றை கொண்ட ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் 6வது தலைமுறை மாடல் ஜூன்16ந் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் புதிய டீசர் படங்களை வெளியிட்டுள்ளது.
2017 ஃபோக்ஸ்வேகன் போலோ
வரும் 16ந் தேதி பெர்லினில் நடைபெற உள்ள அறிமுக விழாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முன்னணி மாடல்களில் ஒன்றாகவும் பாரம்பரியம் மிக்க மாடலாக விளங்கும் போலோ காரின் 6வது தலைமுறைமாடல் வெளியிடப்பட உள்ள நிலையில் பல்வேறு டீசர் வீடியோ மற்றும் படங்கள் வெளியாகியிருந்த நிலையில் புதிதாக முன் தோற்ற அமைப்பு மற்றும் பின் தோற்றத்தினையும் வெளிப்படுத்தும் புதிய படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் உற்பத்தி தொடங்கப்பட உள்ள புதிய போலோ மிகவும் நேர்த்தியான நவீன டிசைன் தாத்பரியங்களுடன் கூடுதல் வசதிகள் மற்றும் தொழிற்நுட்ப ரீதியாக பல்வேறு மேம்பாடுகளுடன் சர்வதேச அரங்கில் பல்வேறு நாடுகளுக்கு விற்பனைக்கு செல்ல உள்ள புதிய போலோ கார் இந்தியாவிலும் இந்தாண்டின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் தொடக்க மாதங்களில் வெளியிடப்படலாம்.
வோல்ஸ்வேகன் குழுமத்தின் MQB A0 என்ற பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய தலைமுறை மாடலில் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். முதன்முறையாக ஸ்பெயின் நாட்டில் உள்ள நவராஆலையில் தொடங்கப்பட உள்ள 2017 போலோ காரின் உற்பத்தி படிப்படியாக சர்வதேச அளவில் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.