கேடிஎம் பைக் நிறுவனத்தின் இ-ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் வெளிப்படுத்தியது. இந்த E-ஸ்பீடு ஸ்கூட்டரை ஸ்கூட்டர் என்பதனை விட டிர்ட்டி பைக் என சொல்லாலம் என்று கேடிஎம் நிர்வாக இயக்குனர் திரு ஸ்டிஃபன் கூறியுள்ளார்.
கேடிஎம் E-ஸ்பீடு ஸ்கூட்டரினை சார்ஜ் செய்ய 2 மணி நேரம் போதுமானது. சாதரன 220வோல்ட் ஸாக்கெட் போதுமானது. இந்த ஸ்கூட்டரின் எடை 140 கிலோ ஆகும். இதில் பொருத்தப்பட்டுள்ள லித்தியம் ஐன் பேட்டரி ஆகும். இந்த பேட்டரியின் கொள்ளவு 4.36 கிலோ வாட். முழு சார்ஜ்யில் 65 கீமி பயணிக்கலாம்.
கேடிஎம் E-ஸ்பீடு ஸ்கூட்டரில் திரவ குளிர்விக்க நிலையான காந்தத்தின் சின்க்ரோனஸ் மோட்டார் பொருத்தப்பட்டுருக்கும். இதன் நிலையான ஆற்றல் 15எச்பி ஆகும். டார்க் 36 என்எம் ஆகும். ஆற்றலை பின் சக்கரங்களுக்கு கடத்த பெல்ட் பயன்படுத்தியுள்ளனர்.
14 இன்ச் ஆலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக் பிடிக்கும் பொழுது பெறப்படும் ஆற்றலை ரீஜெனரேட்டிவ் நுட்பம் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.