மாருதி சுஸூகி நிறுவனத்தின் மிக பிரபலமான காரான ஸ்விப்ட் காருக்கு மாருதி ரூ 5000 முதல் ரூ 10,000 வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. ஸ்விப்ட் கார் அறிமுகம் செய்த தேதியில் இருந்து தள்ளுபடி வழங்கியது இல்லை ஆனால் இன்று நிலைமை வேறு…
மாருதி சுசுகி ஸ்விப்ட் காரின் விற்பனை மந்தமாகியுள்ளதாக இந்த சலுகைகள் மூலம் தெரியவருகின்றது. ஆனால் மாருதி சுசுகி இதனை விற்பனை அதிகரிக்க என காரணம் கூறியுள்ளது.
இந்திய கார் சந்தையே மிக பலவீனமாகி வருகின்றது. பல கார் தயாரிப்பாளர்கள் பல்வேறு விதமான சலுகைகள் அளித்து வருகின்றனர். மாருதி ஸ்விப்ட் டீசல் கார்களை உடனடியாக டெலிவரி செய்யப்படும் என முன்பதிவுகளை வரவேற்கின்றது.
வருகிற மார்ச் 31க்குள் டெலிவரி செய்துவிடுவார்கள். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் மாருதி ரிட்ஸ் டீசல் காருக்கு ரூ 45,000 தள்ளுபடி வழங்கியுள்ளது. மேலும் மாருதி ரிட்ஸ் பெட்ரோல் காருக்கு ரூ 25,000 தள்ளுபடி வழங்கியுள்ளது.
இந்த வருடத்தின் தொடக்க முதலே கார்களின் விற்பனை படு மோசமாகி வருகின்றது. மேலும் பல நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி ஸ்டாக் சேர்ந்து விடாமால் முயற்சித்து வருகின்றது.