இவற்றில் ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் சார்பாக பரிந்துரைக்கப்படும் 7 சீட்டர் எஸ்யூவி என்றால் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி கார்தான். இந்த கேள்வினை கேட்டவர் சங்கப்பலகை அறிவன் ஆவார்.
மஹிந்திரா எக்ஸ்யூவி 500
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார் இந்தியாவின் மிக வேகமாக விற்க்கும் எஸ்யூவி காராகும். மேலும் இரண்டு விதமான புதிய வேரியண்ட்கள் விரைவில் வெளிவரவுள்ளன.
நல்ல சிறப்பான தோற்றத்தால் பலரின் உள்ளத்தை கவர்ந்துள்ள எக்ஸ்யூவி தற்பொழுது 3 விதமான மாறுபட்டவை கிடைக்கின்றது. மஹிந்திரா எக்ஸ்யூவி 500 விலை ரூ 12.25 இலட்சம் முதல் 14.98 வரை கிடைக்கின்றது. இரண்டு விதமான மாறுபட்டவையில் 2 வீல் டிரைவ் மற்றும் ஒன்றில் 4 வீல் டிரைவ் ஆகும்.
3 மாறுபட்டவையிலும் 2179 சிசி 4 சிலிண்டர் 16 வால்வ்கள் பொருத்தப்பட்ட எம்ஹவாக் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்சமாக வெளிப்படும் ஆற்றல் 140 பிஎச்பி ஆகும். 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
இதன் மைலேஜ் நகரங்களில் லிட்டருக்கு 10 முதல் 12 கிமீ மற்றும் நெடுஞ்சாலையில் 15 கிமீ வரை கிடைக்கின்றதாம்.
டிஸ்க் பிரேக்களை பயன்படுத்தியுள்ளனர். 7 விதமான வண்ணங்களில் கிடைக்கின்றது. 70 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் கிடங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரொல், பார்க்கிங் சென்ஸார், ஏபிஎஸ், காற்றுபைகள், இம்மொபைல்சர், எஞ்சின் வார்னிங், க்ராஸ் சென்சார், என பல்வேறு விதமான பாதுகாப்பு வசதிகளை கொண்ட காராகும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி விலை விபரங்கள்..
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 W6 2D– ரூ 12.25 இலட்சம்
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 W8 2D–ரூ 13.85 இலட்சம்
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 W6 4D–ரூ 14.98 இலட்சம்
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 பேஸ்புக் விருப்பம் 10 இலட்சத்தை தொட்டடுள்ளது நீங்களும் விரும்ப www.facebook.com/MahindraXUV500
கூடவே ஆட்டோமொபைல் தமிழனை விரும்ப Automobiletamilan Fan page