புதிய ரக ஸ்போர்ட்ஸ் பைக்கள் உருவாக்குவதற்க்காக நீண்ட கால அடிப்படையில் ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளனர். இதனால் பிஎம்டபிள்யூ ஆசியா சந்தையில் வலுவான சந்தையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் கூட்டணியல் உருவாகும் பைக்கள் இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்தாலும் வெளிநாடுகளில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தாலும் விற்க்கப்படும்.
2015 ஆம் ஆண்டில் டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாக்கப்படும் பைக்கள் விற்பனைக்கு வரலாம். உலகப் புகழ் பெற்ற ஸ்போர்ட்ஸ் பைக்களை பிஎம்டபிள்யூ மோட்டோரடு விற்பனை செய்து வருகின்றது. எனவே மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ் நுட்பத்தினை டிவிஎஸ் பெறும். பிஎம்டபிள்யூ நிறுவனம் மிக சிறப்பான அடித்தளத்தினை இந்தியா மற்றும் ஆசியாவில் அமைக்கும்.
இந்தியாவிற்க்கு அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக்கள் கிடைக்கும்.