இந்தியாவின் மோட்டார் சைக்கிள் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான விற்பனையை எட்டி வருகின்றது.
தற்பொழுது இரண்டாம் இடத்தில் உள்ள பஜாஜ் நிறுவனத்தினை பின்னுக்கு தள்ளி ஹோண்டா இரண்டாம் இடத்திற்க்கு முன்னேறியுள்ளது. 2012-2013 ஆம் நிதி ஆண்டில் ஹோண்டா 26,06,841 வாகனங்களை விற்றுள்ளது. இவற்றில் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் அடங்கும்.
இதே நிதி ஆண்டில் பஜாஜ் 24,63,863 பைக்களை விற்றுள்ளது. பஜாஜ் பைக் மட்டும் விற்பனை செய்கின்றது. ஸ்கூட்டர்கள் பஜாஜ் விற்பனை செய்வதில்லை.
தொடர்ந்து முதலிடத்தினை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தக்க வைத்துள்ளது. 2012-2013 ஆம் ஆண்டில் 59,12,538 வாகனங்களை விற்று முதன்மை நிறுவனமாக விளங்குகின்றது.