கார் இன்சூரன்ஸ் எடுக்கும்பொழுது பல விசயங்களில் முறையான கவனம் செலுத்துவது மிக அவசியமாகின்றது. சரியான கவனம் இல்லாமல் கார் காப்பீடு தேர்வு செய்தால் சில தேவையற்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் எனவே அதனை தவிர்க்க கவனிக்க வேண்டிய சிலவற்றை பார்க்கலாம்.
கார் இன்சூரன்ஸ் டிப்ஸ்
1. கார் இன்சூரன்ஸ் வழங்குவதில் முன்னணியாக விளங்கும் நிறுவனங்களை தேர்வு செய்வது மிகவும் அவசியம்.
2. பாலிசியின் தொகை அதிகமாக இருந்தாலும் அவற்றை தேர்வு செய்தால் அவசர காலங்களில் மிக பெரும் உதவியாக இருக்கும்.
3. இன்ஷ்யூரன்ஸ் முகவரிடம் பாலிசி குறித்து முழுமையான விவரங்களை மிக தெளிவாக கேட்டு அறிவது அவசியம். மேலும் இன்ஷயூரன்ஸ் எடுக்கும்பொழுது அதன் டாக்குமென்டில் குறிப்பிட்ட விவரங்கள் அனைத்திற்க்கும் தெளிவான விளக்கங்களை தெரிந்து கொள்வது கட்டாயாம்.
4. டீலர்கள் பரிந்துரைக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்தையே தேர்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. முழுமையான விவரங்கள் அறிந்த பின்னர் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பாலிசிகளை ஒப்பீடு செய்த பின்னர் தேர்வு செய்யுங்கள்.
5. உங்கள் காரின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் காரின் முழுமையான தகவல்களை அனைத்தினையும் பாலிசியில் குறிப்பிடுவது மிக அவசியம்.
6. குறைவான கட்டண பாலிசிகளை தேர்ந்தேடுப்பதனை விட நல்ல அதிக கவரேஜ் உள்ள பாலிசிகளை தேர்வு செய்யுங்கள். இதனால் பயன் கூடுதலாக இருக்கும்.
மேலும் பல்வேறு விதமான ஆட்டோமொபைல் பராமரிப்பு டிப்ஸ் படிங்க..