மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ என்ற பெயரில் புதிய எஸ்யூவி கான்செப்ட் படங்களை வெளியிட்டுள்ளது. ஜிஎல்ஏ எஸ்யூவி கான்செப்ட் 2013 சாங்காய் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. ஏப்ரல் 20 முதல் சாங்காய் ஆட்டோ ஷோ தொடங்குகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கான்செப்ட் ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் காரினை அடிப்படையாக கொண்டது. மிக நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டாதாக ஜிஎல்ஏ விளங்குகின்றது.
மெர்சிடிஸ் புதிய பிளாட்ஃபாராமான எம்எஃப்ஏ வில் உருவாக்கப்பட உள்ள ஜிஎல்ஏ காரின் நீளம் 4.38 மீட்டர், அகலம் 1.97 மீட்டர், மற்றும் உயரம் 1.5 மீட்டர் ஆகும். மிக அழகான வடிவமைப்பில் உருவாக உள்ள ஜிஎல்ஏ வருகிற 2014 ஆம் ஆண்டின் மத்தியில் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரலாம்.