லம்போர்கினி நிறுவனத்தின் பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார்களை பார்த்திருப்போம். இனி லம்போர்கினி நிறுவனத்தின் நைட்ரோ டிராக்டர் இந்தியா வருகின்றது. லம்போர்கினி டிராக்டர்கள் இந்தியாவின் விலை அதிகமான டிராக்டர்களாக விளங்கும்.
சேம் டச்-ஃபார்(SAME Deutz-Fahr-SDF) நிறுவனம் லம்போர்கினி டிராக்டர்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மிக நேர்த்தியான வடிவமைப்பினை கொண்ட டிராக்டராக விளங்கும் நைட்ரோ டிராக்டர் பல அதிநவீன வசதிகளுடன் விளங்கும்.
லம்போர்கினி நைட்ரோ டிராக்டர் மிக அசத்தலான வடிவமைப்பினை கொண்டது. இதன் விளக்குகள் அனைத்தும் எல்இடி பொருத்தப்பட்டவையாக விளங்கும். மேலும் சொகுசு காரில் பயணிப்பதை போல சொகுசு தன்மையை வழங்கும்.
சேம் டச்-ஃபார் ஆலை ரானிப்பேட்டையில் உள்ளது. கடந்த ஆண்டு இந்த ஆலையில் 6000 டிராக்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 600 டிராக்ட்ர்கள் லம்போர்கினி தொழில்நுட்பத்தினை கொண்டதாகும்.இவை ஐரோப்பா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த டிராக்டர்கள் பெரிய விவசாயிகளை குறிவைத்து விற்பனை செய்யப்படும்.