20 ஆண்டுகளாக விற்பனையில் உள்ள ஹீரோ ஸ்பிளென்டர் பைக் ஸ்பெஷல் எடிசனாக ஸ்பிளென்டர் புரோ கோல்டு என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக விற்பனையில் தொடர்ந்து முன்னணிலை வகிக்கும் ஸ்பிளென்டர் பைக்கின் சிறப்பு எடிசனில் தங்க நிறத்தில் கிடைக்கும். மேலும் ஸ்பெஷல் எடிசன் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.
இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்பிளென்டர் பைக்கில் 97.2 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் அதிகபட்ச ஆற்றல் 7.6 பிஎச்பி ஆகும். மற்றும் டார்க் 8.04 என்எம் ஆகும்.
ஸ்பிளென்டர் புரோ கோல்டு மைலேஜ் லிட்டருக்கு 79 கிமீ ஆகும். ஸ்பிளென்டர் புரோ கோல்டு பைக் ஆலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் ஸ்டார்ட் ஆகும்.
ஸ்பிளென்டர் புரோ பைக்கினை விட ஸ்பிளென்டர் புரோ கோல்டு ரூ 1000 அதிகமாகும். ஸ்பிளென்டர் புரோ கோல்டு விலை ரூ 48,500 (தில்லி எக்ஸ்ஷோரூம் விலை)