கடந்த மே 2017 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த டாப் 10 கார்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். முதல் 10 இடங்களில் மாருதி நிறுவனத்தின் 7 மாடல்கள் இடம்பெற்றுள்ளது.
டாப் 10 கார்கள் – மே 2017
கடந்த மாதம் மாருதி சுசுகி ஆல்டோ இரண்டாவது இடத்தை பெற்றிருந்த நிலையில் மே மாத முடிவில் 23,618 கார்களை முதலிடத்தை பெற்றுள்ளது. இதனை தொடரந்து மாருதி ஸ்விஃப்ட் 16,532 கார்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20, கிராண்ட் ஐ10 மற்றும் க்ரெட்டா எஸ்யூவி போன்ற மாடல்களும் முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளது. ஹூண்டாய் மற்றும் மாருதி இரண்டு நிறுவனங்களை தவிர வேறு எந்த நிறுவனங்களும் பட்டியலில் இடம்பெறவில்லை.
முழுமையான அட்டவனையை படத்தில் காணலாம். மேலும் கூடுதல் தகவலுக்கு ஏப்ரல் 2017 விற்பனையும் இணைக்கப்பட்டுள்ளது.