செவர்லே என்ஜாய் விரைவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் செவர்லே என்ஜாய் எம்பிவி கார்களின் அதிகார்வப்பூர்வ படங்களை தன்னுடைய இணையத்தில் வெளியிட்டுள்ளது.
செவர்லே என்ஜாய் எம்பிவி கார் டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கும்.
செவர்லே என்ஜாய் பெட்ரோல் கார்
செவர்லே என்ஜாய் காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 104 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 131 என்எம் ஆகும்.
செவர்லே என்ஜாய் டீசல் கார்
செவர்லே என்ஜாய் காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.இதன் ஆற்றல் 77.5 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 188 என்எம் ஆகும்.
மாருதி எர்டிகா, எவாலியா போன்ற கார்களுக்கு மிக பெரிய சவாலினை கொடுக்கும். இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரும்.