மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ கிளாஸ் காரின் 2017 மெர்சிடிஸ் பென்ஸ் E 220d மாடல் ரூ.57.14 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மிக குறைந்த தொடக்க விலையில் அமைந்துள்ள இ கிளாஸ் டீசல் மாடலில் 2.0 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
2017 மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ் டீசல்
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2017 மெர்சிடிஸ் பென்ஸ் E 220d வேரியன்ட் முந்தைய மாடலான E 250d மாடலுக்கு மாற்றாக புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சினை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாடலில் 194 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு 400 என்எம் டார்க் வரை வழங்குகின்றது. ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய இந்த கார் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.8 விநாடிகள் எடுத்துக் கொள்ளும்.
இந்தியாவில் ரூ.70.15 லட்சத்தில் விற்பனையில் உள்ள டாப் வேரியன்ட் மாடலான E 350d மாடலை விட தோற்ற அமைப்பு மற்றும் வசதிகள் போன்றவற்றில் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றுள்ள E 220d வேரியன்டில் 12.3 அங்குல கமென்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உள்பட பார்க்கிங் பைலட் அசிஸ்டென்ட் உள்பட ஸ்டீயரிங் டச்பேட்ஸ், தெர்மோட்ரானிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்றவற்றை பெற்றுள்ளது.
வெளி தோற்ற அமைப்பில் 17 அங்குல 5 ஸ்போக் அலாய் வில், சூரிய மேற்கூறை போன்வற்றை பெற்று தோற்றத்தில் டாப்மாடலை போலவே விளங்குகின்றது. பெட்ரோல் அடிப்படை வேரியன்டில் உள்ள ஏர் சஸ்பென்ஷன் , ஹைஃபை ஆடியோ மற்றும் 360 டிகிரி கேமிரா போன்ற சில வசதிகளை பெறவில்லை.
2017 மெர்சிடிஸ் பென்ஸ் E 220d விலை ரூ. 57.14லட்சம் (புனே எக்ஸ்-ஷோரூம்)