தமிழகத்தில் தற்போது, சென்னை, கோவை, மதுரை மற்றும் நாகர்கோவில் நகரங்களிலும் இதுதவிர, புதுச்சேரியிலும் டோமினார் 400 கிடைக்கின்றது.
ஸ்போர்ட்டிவ் பைக் தயாரிப்பாளரான கேடிஎம் நிறுவனத்தின் கேடிஎம் டியூக் 390 பைக்கில் இடம்பெற்ற அதே 373 சிசி எஞ்சின் டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்துடன் 34.50 hp பவரை 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.
டோமினார் 400 பைக்கின் உச்ச வேகம் மணிக்கு 148 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.
டோமினார் 400 பைக் விலை ரூ. 1.41,677 லட்சம் (டிஸ்க் பிரேக்)
டோமினார் 400 பைக் விலை ரூ. 1.55,927 லட்சம் ( ட்வீன் சேனல் ஏபிஎஸ் மாடல்)
( தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் விலை )
டோமினார் 400 பைக் விலை ரூ. 1.33,353 லட்சம் (டிஸ்க் பிரேக்)
டோமினார் 400 பைக் விலை ரூ. 1.46,794 லட்சம் ( ட்வீன் சேனல் ஏபிஎஸ் மாடல்)
( புதுச்சேரி எக்ஸ்-ஷோரூம் விலை )