வருகின்ற ஆகஸ்ட் 2017-ல் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் உற்பத்தியை மஹாராஷ்ட்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தொடங்கி வைத்தார். ஃபியட் ராஞ்சவுகன் ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
ஜீப் காம்பஸ் எஸ்யூவி
ஃபியட் கிறைசலர் குழுமத்தின் அங்கமான ஜீப் பிராண்டு காம்பஸ் எஸ்யூவி மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய முதலீடாக ரூ.1800 கோடி வரை ஃபியட் நிறுவனத்தின் மஹாராஷ்டிராவில் உள்ள ராஞ்சவுகன் ஆலையில் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்படுகின்ற வலது பக்கம் ஸ்டீயரிங் பெற்ற மாடல்கள் இந்தியா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா , இங்கிலாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
ஜீப் காம்பஸ் எஞ்சின் விபரம்
காம்பாஸ் மாடலில் 170 ஹெச்பி ஆற்றலுடன் 350 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 160 ஹெச்பி பவருடன், 50 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது.
இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டூயல் கிளட்ச் கியராபாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 4×4 டிரைவ் , 4×2 டிரைவ் என இருவிதமான வகைகளில் கிடைக்க உள்ளது.
இந்தியாவில் காம்பாஸ் எஸ்யூவி மாடலில் ஸ்போர்ட், லிமிடெட் மற்றும் லாங்ட்யூட் போன்ற வேரியன்ட்கள் தயாரிக்கப்படுகின்றது. காம்பசில் ஸ்னோவ், சேன்ட் மற்றும் ராக் மோட்கள் இடம்பெற உள்ளது.
விலை
காம்பஸ் எஸ்யூவி காரின் விலை பற்றி எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை. எதிர்பார்க்கப்படுகின்ற விலை ரூ. 18 லட்சம் முதல் தொடங்கி ரூ.22 லட்சத்தில் நிறைவடையலாம்.