பார்முலா 1 தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ரெனோ ட்விஸி ஸ்போர்ட் எஃப்-1 எலக்ட்ரிக் கான்செப்ட் காரினை உருவாக்கியுள்ளது. ரெனோ ட்விஸி ஸ்போர்ட் எஃப்-1 கார் பார்முலா 1 கார்களில் பயன்படுத்தப்படும் நுட்பமான KERS நுட்பத்தினை பயன்படுத்தியுள்ளனர்.
KERS என்றால் என்ன
KERS (Kinetic Energy Recovery System) என்றால் ஆற்றலை மீட்டு சேமித்து வைத்து தேவைப்படும்பொழுது எஞ்சினுக்கு உடனடியாக ஆற்றலை கொடுத்து வேகமாக இயங்க வைக்கும் நுட்பம் ஆகும். பிரேக் செய்ப்படும்பொழுது வீணாகும் ஆற்றலை மீட்டு சேமிக்கும்.
KERS அமைப்பில் மூன்று விதமான பாகங்கள் உள்ளன. அவை எலக்ட்ரிக் மோட்டார் ஜெனரேட்டர் யூனிட், லித்தியம் ஐன் பேட்டரி மற்றும் KERS கட்டுப்பாடு அமைப்பு.
பார்முலா 1 கார்களை போல ரெனோ ட்விஸியில் ஃப்ரன்ட் ஸ்பாய்லர், சைட் பாட், ரியர் விங், டிஃப்யூசர், ரியர் வியூ மிரர் மற்றும் எல்இடி மற்றும் மழைக்கால விளக்குகளை பயன்படுத்தியுள்ளனர். இதனால் மிக ஸ்போர்டிவான தோற்றத்தில் ட்வ்ஸி விளங்குகின்றது.
சாதரண ட்விஸி கார் 17பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.
ரெனோ ட்விஸி ஸ்போர்ட் எஃப்-1 காரில் KERS நுட்பத்தினை பயன்படுத்தபட்டுள்ளது. இதன் ஆற்றல் 97பிஎச்பி ஆகும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 109 கிமீ ஆகும். 0-100 கிமீ வேகத்தை 13 விநாடிகளில் எட்டிவிடும்.
ரெனோ ட்விஸி ஸ்போர்ட் எஃப்-1 காரில் பயன்படுத்தப்பட்டுள்ள டயர் பார்முலா ரெனோ 2.0 ரேஸ் காரின் டயராகும். மேலும் இதன் ஸ்டீயரிங் பார்முலா ரெனோ 3.5 ரேஸ் காரில் பயன்படுத்தப்பட்ட ஸ்டீயரிங்கினை அடிப்படையாக கொண்டது.
தற்பொழுது ரெனோ ட்விஸி ஸ்போர்ட் எஃப்-1 உற்பத்தி செய்வதற்க்கான திட்டம் இல்லை என ரெனோ தெரிவித்துள்ளது.