மணிக்கு 160கிமீ வேகத்தை சர்வ சாதாரணமாக எட்டுகின்ற இந்த கால கட்டத்தில் உலகிலேயே முதல் முறையாக அதிவேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக அபராதம் இங்கிலாந்து நாட்டில் வசூலிக்கப்பட்ட விபரம் வெளியாகியுள்ள சுவாரஸ்யமான தகவல் மிகவும் வேடிக்கையாக இருக்கலாம்.
உலகின் முதல் அதிவேக பயணத்துக்கு அபராதம்
உலகின் முதல் தானுந்து என அழைக்கப்படும் கார்ல் பென்ஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட பென்ஸ் வேலோ காரை அடிப்படையாக கொண்டு இங்கிலாந்தில் உள்ள கென்ட் பகுதியைச் சேர்ந்த ஈஸ்ட் பெக்ஹாம் என்ற இடத்தில் கார் தயாரிக்கும் உரிமையை வில்லியம் அர்னால்டு சன்ஸ் எனும் நிறுவனம் 1896 ஆம் ஆண்டில் பெற்றது.
benz valeo
இதே ஆண்டில் அர்னால்ட் பென்ஸ் எனும் பெயரில் முதல் காரை இந்த நிறுவனம் தயாரித்தது. இந்த காரை அந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான வால்டர் அர்னால்ட் என்பவர் மணிக்கு 13 கிமீ வேகத்தில் காரை பொது போக்குவரத்து சாலையில் இயக்கும் பொழுது முதன்முறையாக அதிவேகத்தில் சென்ற குற்றத்துக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
13 கிமீ வேகத்தில் சென்றதற்கே அபராதமா என்றால் ? ஆம் உண்மைதான், அந்த காலத்தில் இங்கிலாந்து நகரில் பொது போக்குவரத்து சாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச வேகம் மணிக்கு 3.2 கிமீ மட்டுமே ஆகும். எனவே அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட மூன்று மடங்கு கூடுதலான வேகத்தில் சென்றதற்காக ஒரு ஷில்லிங் (1 shilling) வசூலிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் மிக பழமையான கரன்சி முறை ஷில்லிங் ஆகும்.
இதைவிட மற்றொரு ஆச்சிரியத்தை தரும் தகவல் என்னவென்றால் 13 கிமீ வேகத்தில் காரை ஓட்டிச்சென்ற வால்டர் அர்னால்ட் பிடிக்க தனது மிதிவண்டியை பயன்படுத்தியே காவலர் பிடித்துள்ளார். காருக்கே இந்த நிலைமை என்றால் அந்த காலத்தில் சைக்கிள் ஓட்டிகளின் வேகம் என்னவாக இருந்திருக்கும். இது மட்டுமல்ல, அர்னால்டு அன்றைய தினத்திலே அதிகபட்ச வேகத்திற்காக 4 முறை காவலர்களிடம் சிக்கியுள்ளார்.
arnold benz
சில வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 22.5கிமீ ஆக உயர்த்திய பின்னர் லண்டன் முதல் பிரைட்டன் நகர் வரை நடந்த உலகின் மிக நீளமான கார் பேரணி என பெயர் பெற்ற Emancipation Run (விடுதலை ஓட்டம்) ஒன்றில் அர்னால்டு இதே காருடன் பங்கேற்றார்.
மேலும் படிங்க–> உங்களை வியப்பில் ஆழ்த்தும் ஆட்டோமொபைல் தகவல்கள்