ரூ.27.98 லட்சம் ஆரம்பவிலையில் வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாப்ஸ் பொருத்தப்பட்ட மாடல் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வோக்ஸ்வேகன் டிகுவான்
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்பார மாடலில் வெளிவந்துள்ள டிகுவான் கம்ஃபார்ட் லைன் மற்றும் ஹைலைன் என இரு வகையான வேரியண்டில் விற்பனைக்கு கிடைக்கும்.
2007 ஆம் ஆண்டு முதன் முறையாக சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்ட டிகுவான் இரண்டாம் தலைமுறை மாடல் 2012ல் வெளியானது அதனை தொடர்ந்து மூன்றாம் தலைமுறை டிகுவான் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் 3.5 மில்லியன் டிகுவான் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
எஞ்சின்
டிகுவான் எஸ்யூவி மாடலில் 2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 147 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 340 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் முதற்கட்டமாக டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் மட்டுமே அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இருவிதமான வேரியன்ட்களில் வந்துள்ள டிகுவானில் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் நிரந்தரமாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஆஃப் ரோடு வசதிகளுக்கு ஏற்ற அம்சத்தை பெற தனியான மோட் வழங்கப்பட்டுள்ளது.
வசதிகள்
இன்டிரியரில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் நேவிகேஷன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளுடன் வரவுள்ளது. தோற்ற அமைப்பில் 17 அங்குல அலாய் வீல் மற்றும் 18 அங்குல அலாய் வீல் (ஹைலைன் வேரியன்ட்), பகல் நேரத்தில் ஒளிரும் எல்இடி விளக்குகளுடன் வரவுள்ளது.
பாதுகாப்பு அம்சம்
யூரோ என்சிஏபி சோதனையில் 5 நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்ற டிகுவான் மாடலில் 6 காற்றுப்பைகள் உள்பட ஏபிஎஸ், இஎஸ்சி போன்றவை இடம்பெற்றுள்ளது.
போட்டியாளர்கள்
இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஃபார்ச்சூனர் , எண்டேவர் , ட்ரெயில்பிளேசர் , பஜெரோ ஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
வோல்ஸ்வேகன் டிகுவான் விலை பட்டியல்
வேரியண்ட் | விலை பட்டியல் |
கம்ஃபோர்ட்லைன் | ரூ. 27.98 லட்சம் |
ஹைலைன் | ரூ. 31.04 லட்சம் |